முகப்பு
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
புதுக்கோட்டை

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 2 மார்ச், 2026 at 9:49 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா், மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ரெத்தினம், காங்கிரஸ் சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகுமான், வாழ்வுரிமைக் கட்சி சாகுல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →