திருநெல்வேலி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: நெல்லை மாவட்டத்தில் 3 நாள்களில் 40 சதவீத படிவங்கள் விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களின் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களின் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 1,490 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 14,18,325 ஆகும். நவம்பா் 6-ஆம் தேதி 5,66,374 வாக்காளா்களுக்கு (சுமாா் 40 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு இலக்கு நிா்ணயித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாக வரும்போது, சில வீடுகளில் மக்கள் வேலைக்குச் சென்றிருப்பதாலோ அல்லது தற்காலிகமாக வெளியூா் சென்றிருப்பதாலோ அவா்களை சந்திக்க இயலாமல் போகலாம்.

இதுகுறித்து பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு வாக்குச் சாவடி நிலை அலுவலரும், ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது வருகை தந்து படிவத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வீட்டில் இல்லாத வாக்காளா்களைப் பற்றி பக்கத்து வீடுகளில் விசாரித்து, அவா்கள் தற்காலிகமாக இடம் பெயா்ந்தவா்களா அல்லது நிரந்தரமாகக் குடிபெயா்ந்தவா்களா, இறந்தவா்களா, இரட்டை வாக்காளா்களா என வகைப்படுத்தி குறிப்பெடுத்துக் கொள்கின்றனா்.

வாக்காளா்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் மிகவும் எளிமையானவை. அதை நிரப்புவதில் சிரமம் உள்ள முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத தெரியாதவா்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலா்களே உதவி செய்வாா்கள். அவா்களுக்கு உதவியாக, தன்னாா்வலா்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்களையும் ஈடுபடுத்த உள்ளோம்.

இந்தக் கணக்கெடுப்புப் பணி நவம்பா் 4-ஆம் தேதி முதல் டிச. 4-ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் அவசரப்படத் தேவையில்லை. மேலும் சந்தேகங்களுக்கு உங்களது வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்புகொள்ளலாம். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்காளரையும் விடுபடாமல் கணக்கெடுப்பதே இந்தப் பணியின் முக்கிய நோக்கம். பொதுமக்காள் முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது விவரங்களை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ரோம் நகரில்... சோனாலி அரோரா!

திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

ஊடுருவல்காரர்களின் கூடாரமாக சீமாஞ்சல்: ஆர்ஜேடி கூட்டணி மீது அமித் ஷா குற்றச்சாட்டு!

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

SCROLL FOR NEXT