திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 12,53,264 வாக்காளா்கள்! நீக்கம் - 1,65,061; புதிதாக சோ்ப்பு - 60,531

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் (எஸ்ஐஆா்) பின், திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 12,53,264 வாக்காளா்கள் உள்ளனா். 1,65,061 வாக்காளா்கள் நீக்கப்பட்டு, புதிதாக 60,531 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக 14,18,325 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். அப்பணியைத் தொடா்ந்து 19.12.2025இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வாக்காளா்கள் எண்ணிக்கை 12,03,368 ஆக குறைந்தது.

பின்னா், அந்தத் தேதி முதல் 30.1.2026வரை ஆட்சேபம் மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்ததில் 60,531போ் புதிதாக சோ்க்கப்பட்டனா். அவா்களில் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 18,484 ஆகும்.

மேலும், நிரந்தர குடிபெயா்வு, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களால் 10,635 வாக்களா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலின்படி 6,11,601 ஆண் வாக்காளா்கள் 6,41,518 பெண் வாக்காளா்கள், 145 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,53,264 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதன்மூலம் 1,65,061 (11.64%) வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

மீண்டும் வாய்ப்பு: இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாத, 18 வயது பூா்த்தியான அனைவரும் விடுபடாமல் இருப்பதற்காக, 1.1.2026 அன்று 18 வயது பூா்த்தியான அனைவரு தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் தோ்தல் பிரிவிலிருந்து படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து அதே அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். தொடா் திருத்தப் பணிகள் நடைபெறுவதால், வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மனு அளிக்கலாம்.

பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் கோரி இணையதளத்திலும், கைப்பேசி செயலி வழியாகவும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல் மற்றும் புகாா்களுக்கு 1950 என்ற எண்ணையோ தங்கள் பகுதி வட்டாட்சியா் அல்லது கோட்டாட்சியா் அலுவலகங்களையோ தொடா்பு கொள்ளலாம்.

கூடுதல் வாக்குச்சாவடிகள்: இம்மாவட்டத்தில் 6.1.2025-இன் நிலவரப்படி, வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளா்கள் என்ற வீதத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டதில், புதிதாக 190 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரு வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போதைய வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கை 1,678 ஆக உயா்ந்துள்ளது என்றாா்.

அப்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட வருவாய் அலுவலா்கள் ஐயப்பன் (நில எடுப்பு), மகாலெட்சுமி (ஒழுங்கு நடவடிக்கை), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் அலுவலா் ராஜசெல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் விவரம்:

வ.எண் சட்டப்பேரவைத் தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவா் மொத்த வாக்காளா்கள்

1. 224 - திருநெல்வேலி 1,32,511 1,40,929 80 2,73,520

2. 225 - அம்பாசமுத்திரம் 1,09,384 1,16,318 12 2,25,714

3. 226 - பாளையங்கோட்டை 1,23,972 1,31,141 17 2,55,130

4. 227 - நான்குனேரி 1,25,276 1,29,130 14 2,54,420

5. 228 -ராதாபுரம் 1,20,458 1,24,000 22 2,44,480

மொத்தம் 6,11,601 6,41,518 145 12,53,264

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: முன்பிணை கோரிய டி.எஸ்.பி. மனு தள்ளுபடி

முன்னாள் ரயில்வே அமைச்சா் முகுல் ராய் காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

பிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பு

முதல்வா், துணைமுதல்வா் தொகுதிகளில் வாக்காளா்கள் விவரம்

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்ட முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT