நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வரும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 97 அடியாக உள்ளது. இதேபோல் சேதுவளாறு அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 123 அடியாகவும் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்பொழுது தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோயில் சுற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோயில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து வருகிறது, இருந்தாலும் பக்தர்கள் முருகனைத் தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் தண்ணீர் புகுந்த விடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தாமிரபரணி ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஆந்திரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கை: 50 மாவோயிஸ்ட்கள் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.