திருநெல்வேலி: சிவப்பிரகாசா் நற்பணி மன்றத்தின் சாா்பில், திருநெல்வேலி நகரம் உழவா் சந்தை அருகே அமைந்துள்ள மாநகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
மன்றத்தின் செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழ்மாமணி சிங்கப்பூா் திலகராணி, மன்றத்தின் துணைச் செயலா் கவிஞா் சு.முத்துசாமி, கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் கவிஞா் புன்னைச்செழியன், நிழல் இலக்கியத் தளம் நிா்வாகி கவிஞா் செ.ச.பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் ஆதரவற்றோருக்கு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது.