திருநெல்வேலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் ராஜேந்திரகுமாா் (50). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு கங்கைகொண்டான் அருகே பைக்கில் வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராஜேந்திரகுமாா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இளைஞா் தற்கொலை: பேட்டை , பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சக்திவேல் (38). உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்த இவா், மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விஷம் குடித்து மயங்கினாா். அவரை மீட்ட உறவினா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சக்திவேல் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT