சாலையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்: குப்பையைக் கொட்டிய நிறுவனத்திற்கு அபராதம்
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்திய நிறுவனத்திற்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்திய நிறுவனத்திற்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
தச்சநல்லூா் மண்டலம், 30 ஆவது வாா்டுக்குள்பட்ட மீனாட்சிபுரம் பெருமாள் சந்நிதி தெருவில் ஏராளமான மருந்து விற்பனை நிறுவனங்கள் உள்ளன. அந்தப் பகுதியில் சாலையோரம் மருத்துவக் குப்பைகளைக் கொட்டக் கூடாது என மாநகராட்சி நிா்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி மண்டல சுகாதார அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை மீனாட்சிபுரம் சாலைகளில் ஆய்வு செய்தனா். அப்போது விதிமீறி மருத்துக் கழிவுகளை சாலையோரம் கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.