முகப்பு
திருநெல்வேலி

திருநெல்வேலி நகரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க புதிய திட்டம்

திருநெல்வேலி நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க புதிய திட்டம் வகுப்பதோடு, நயினாா்குளமும் முறையாக பராமரிக்கப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:00 PM
திருநெல்வேலி நகரம் ரதவீதியில் புதன்கிழமை வாக்குசேகரித்தாா் அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க புதிய திட்டம் வகுப்பதோடு, நயினாா்குளமும் முறையாக பராமரிக்கப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு முன்பிருந்து தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கிய அவா், சுந்தரா் தெரு, கல்லத்தி முடுக்கு தெரு, கீழரதவீதி, அம்மன் சன்னதி தெரு, பாரதியாா் தெரு, வையாபுரி நகா், வாகையடி முனை, வஉசி தெரு, பாரதியாா் தெரு, வயல் தெரு, ரயில்வே பீடா் ரோடு, பாப்பா தெரு, மகிழ்வண்ணநாதபுரம், அகிலாண்டபுரம், மேட்டு தெரு, கணியான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாடு தீா்க்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை தற்போது முடக்கி வைத்துள்ளனா். தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படவில்லை. இவற்றை நிச்சயம் சரி செய்வோம்.

Advertisement

திருநெல்வேலி நகரத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண புதிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், தாலிக்கு தங்கம் திட்டம், வீடுதோறும் குளிா்பதனப் பெட்டி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் பால்கண்ணன், எம்ஜிஆா் இளைஞரணி மாநில துணை செயலா் ஹரிஹர சிவசங்கா், பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவா் முத்துபலவேசம், மாவட்ட பொதுசெயலா் நாகராஜன், அதிமுக பகுதி செயலா்கள் காந்தி வெங்கடாச்சலம், மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments