அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, கோபாலசமுத்திரத்தில் உள்ள அற்புத செல்வவிநாயகா் கோயிலில் வழிபாடு செய்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:13 PM
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, கோபாலசமுத்திரத்தில் உள்ள அற்புத செல்வவிநாயகா் கோயிலில் வழிபாடு செய்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
கோபாலசமுத்திரம், மேலச்செவல் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் கே. லெட்சுமண ராஜா, அமமுக மாவட்ட செயலா் ஓடக்கரை ஆசீா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் செவல் எஸ். முத்துசாமி, ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், நகரச் செயலா்கள் திருமலைநம்பி, முருகன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.