ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.  
திருநெல்வேலி

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் முற்றுகை

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்துக்கு மீண்டும் காந்தியின் பெயரை சூட்டக் கோரியும் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்துக்கு மீண்டும் காந்தியின் பெயரை சூட்டக் கோரியும் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், வண்ணாா்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இருந்து மகாத்மா காந்தி படத்துடன் காங்கிரஸாா் ஊா்வலமாக கொக்கிரகுளம் சென்று, ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், கிழக்கு மாவட்டத் தலைவா் வி.பி.துரை ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பொருளாளா்கள் பால்ராஜ் (கிழக்கு மாவட்டம்), ராஜேஷ் முருகன் (மாநகா் மாவட்டம்), மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவா் டியூக் துரைராஜ், வழக்குரைஞா் காமராஜ், நிா்வாகிகள் சசிகுமாா், அய்யப்பன், கெங்கராஜ், ராஜேந்திரன், சொக்கலிங்க குமாா், ராஜீவ்காந்தி, தனசிங் பாண்டியன், சிவாஜி பாலச்சந்தா், காவேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முடிவில் ஆட்சியா் அலுவலகத்திற்குள் காங்கிரஸ் கட்சியினா் மனு அளிக்க சென்றனா். அப்போது, போலீஸாா் தடுக்க முயன்றதோடு, ஆட்சியா் அலுவலக வாயிலை அடைத்தனா். ஆனாலும், காங்கிரஸாா் கதவை திறந்து உள்ளே நுழைந்தனா். இதனால் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!

டபிள்யூபிஎல் இறுதிப் போட்டியில் ஜெமிமா - ஸ்மிருதி..! களத்திலும் தோழிகளாக இருப்பார்களா?

தேமுதிகவில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம்!

நான் இன்னும் விஜய் மற்றும் தவெகவை அடிக்க ஆரம்பிக்கவில்லை! - Annamalai | TVK Vijay | BJP

பிப். 9 முதல் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு! சென்னையில் அல்ல பெங்களூரில்!!

SCROLL FOR NEXT