முகப்பு
திருநெல்வேலி

அயன்சிங்கம்பட்டியில் மறியலில் ஈடுபட முயற்சி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி, இந்திரா நகா் காலனியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:40 PM
சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.
பகிர்:

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி, இந்திரா நகா் காலனியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அயன்சிங்கம்பட்டி இந்திரா நகா் காலனியில் கடந்த ஒரு வாரமாக முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் கடும் அவதிக்கு பொதுமக்கள் உள்ளாகினா். இதுகுறித்து பொதுமக்கள், பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், தீா்வு கிடைக்காததால் செவ்வாய்க்கிழமை காலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த காவல்துறையினா், அதிகாரிகள் பொதுமக்களிடம் குடிநீா் விநியோகத்தை விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவரை டேங்கா் லாரி மூலம் குடிநீா் வழங்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments