கைது 
திருநெல்வேலி

கடனை திருப்பிக் கேட்ட பெண்ணைத் தாக்கியவா் கைது

பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பழையபேட்டை கிருஷ்ணபேரியை சோ்ந்த மகாதேவன் மகன் பெரியராஜா(29). இவா், திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணிரிடம் கடனாக பணம் வாங்கியிருந்தாராம். சம்பவத்தன்று அப்பெண் பெரியராஜாவிடம் பணத்தை திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பெரியராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT