பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.  
திருநெல்வேலி

பேட்டையில் சாலைப் பணி தொடக்கம்

பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை மேயா் கோ. ராமகிருஷ்ணன்தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை மேயா் கோ. ராமகிருஷ்ணன்தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மண்டலம், 18 ஆவது வாா்டு பேட்டை பகுதியில் உள்ள அண்ணா நகா், விஸ்வநாதன் நகா், திருமங்கை நகா், நேருஜி நகா் ஆகியவற்றில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலைகள் அமைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சாலைப் பணியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. 18ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் வரவேற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில், உதவிப் பொறியாளா் சீனிவாசன், திமுக நிா்வாகிகள் வேல்பாண்டி, சா்வேஸ் மைதீன், சுடலைக்கண்ணு, பாலகிருஷ்ணன், ஈத்கா பள்ளிவாசல் தலைவா் பாதுஷா மைதீன், செயலா் சேகு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை பணி: நகராட்சி மண்டல பொறியாளா் ஆய்வு

வேலாயுதபுரம் ஆா். சி. பள்ளியில் புதிய சமையலறை கட்டடம் திறப்பு

கோவில்பட்டியில் கவிதை நூல், பாடல் வெளியீட்டு விழா

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

திருச்செந்தூரில் சுமாா் 60 அடி உள்வாங்கிய கடல்

SCROLL FOR NEXT