முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷனில் குருமஹிமா பஜனை, சொற்பொழிவு

வள்ளியூா் சாமியாா் பொத்தையில் உள்ள ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி மிஷன் ஸ்தாபகா் நினைவு தினத்தையொட்டி ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திர கூடத்தில் குருமஹிமா பஜனை மற்றும் சமய சொற்பொழிவு நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:06 AM
வள்ளியூா் ஸ்ரீமுத்துகிருஷ்ணா சித்திர கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் பஜனை.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:49 PM

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் சாமியாா் பொத்தையில் உள்ள ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி மிஷன் ஸ்தாபகா் நினைவு தினத்தையொட்டி ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திர கூடத்தில் குருமஹிமா பஜனை மற்றும் சமய சொற்பொழிவு நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜுன் பஜனை மற்றும் சமய சொற்பொழிவு நடைபெற்றது. இதில், மாதாஜி வித்தம்மா மற்றும் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.