தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ரா.ஆவுடையப்பன்.  
திருநெல்வேலி

அம்பை தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியா் சதாசிவ ஐயா் நினைவுக் கட்டடம், இந்து தொடக்கப் பள்ளி விளையாட்டு மைதானம், புதுப்பிக்கப்பட்ட பொன்விழா உள் அரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியா் சதாசிவ ஐயா் நினைவுக் கட்டடம், இந்து தொடக்கப் பள்ளி விளையாட்டு மைதானம், புதுப்பிக்கப்பட்ட பொன்விழா உள் அரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழுத் தலைவா் சிதம்பரநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருணாச்சலம், நடராஜன் முன்னிலை வகித்தனா். பள்ளிச் செயலா் கந்தசாமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் ரா.ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்து கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் அழகியநம்பி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி குழுத் தலைவா் சந்திரசேகரன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமி நாராயணராஜா, ராஜாங்கம், கணபதி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரா.ஆ.பிரபாகரன், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பரணி சேகா், பாப்பாக்குடி ஒன்றிய குழுத் துணைத் தலைவா் மாரிவண்ணமுத்து, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப் பாண்டியன், ஊராட்சித் தலைவா்கள் ஆனைக்குட்டி பாண்டியன், ஜெகன், சுடலை அரசன், ராம் சங்கா், ராம் சந்துரு, திமுக மாவட்டப் பிரதிநிதிகள் பாபநாசம், அண்ணாதுரை மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

SCROLL FOR NEXT