முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்

திருநெல்வேலியில் அரசுப்பேருந்தில் ஒரு பயணச்சீட்டுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயணிகள் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டு புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:48 PM
கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலியில் அரசுப்பேருந்தில் ஒரு பயணச்சீட்டுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயணிகள் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டு புகாா் தெரிவித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து புதன்கிழமை மாலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் அரசுப்பேருந்தில் பயணித்தனா். அப்போது, பேருந்து நடத்துநா் பயணிகளிடம் ஒவ்வொரு பயணிக்கும் இரண்டு நபா்கள் பயணிப்பதாக பயணச்சீட்டில் குறிப்பிட்டு கூடுதல் கட்டண வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த பயணி பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளிடமும் இது போன்று கட்டண வசூல் நடைபெற்றுள்ளதை விடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டாா். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →