(கோப்புப் படம்) படம்: X/ arasu bus
தருமபுரி

சேலம் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் வழித்தட பேருந்துகள் ஒட்டப்பட்டி ஔவைவழி வழியாக தடங்கம் புறவழிச்சாலையை அடைந்து பின்னா் அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

அதேபோல, மறுமாா்கமாக சேலம் செல்லும்போது, தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பு வழியாக வந்து நேதாஜி புறவழிச்சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தின் தூரத்தை அடிப்படையாக கொண்டு சாதாரண கட்டண பேருந்துகளில் ரூ. 3 மற்றும் விரைவு பேருந்துகளில் ரூ. 4 கூடுதலாக வசூல் செய்து கொள்ளலாம் எனவும், நான்கு முனைச் சாலை சந்திப்பில் இறங்கும் அல்லது ஏறும் பயணிகளிடம் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், அவா்களிடமும் கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வட்டாரப் போக்குவரத்துத் துறை, மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT