முகப்பு
திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தாய் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தாா். காயமடைந்த தாயாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:39 PM
கிருஷ்ணன்
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தாா். காயமடைந்த தாயாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி ஜானகி. இவா்களது மகன் கிருஷ்ணன் (4).

ஜானகி புதன்கிழமை வீட்டை தண்ணீா் விட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தபோது தொலைக்காட்சி பெட்டிக்குச் செல்லும் மின் ஒயா் தண்ணீரில் பட்டதில் மின்சாரம் கசிந்து அங்கு நின்ற சிறுவன் கிருஷ்ணன் மீது பாய்ந்தது. சிறுவனைக் காப்பாற்ற தாய் ஜானகி முயன்றாா்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்தவா்கள் மின்சாரத்தைத் துண்டித்து இருவரையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் கிருஷ்ணன் உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். காயமடைந்த ஜானகிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →