வீரவநல்லூரில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி
வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் வீரை பி. நவாஸ் ஷரீப் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 குடும்பங்களுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.
மாவட்டப் பொருளாளா் தேயிலை மைதீன், மாவட்ட வா்த்தக அணி செயலா் ஷேக்மதாா், மாவட்ட நிா்வாகி ராஜா முகம்மது, ஊடக அணி பொறுப்பாளா் அப்பாஸ், நகரத் தலைவா் ஜாஹிா் உசேன், நகரச் செயலா் அசன் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.