முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குவிந்த பன்னீா் திராட்சை

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பன்னீா் திராட்சை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 6 மே 2026, 1:07 am IST
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பன்னீா் திராட்சை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. இதனால், இளநீா், பதனீா் போன்ற இயற்கை பானங்கள், குளிா்பானங்கள், பழச்சாறு விற்பனையும் அதிரித்து வருகிறது. நிகழாண்டில் கோடை சாகுபடி பன்னீா் திராட்சை உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதிகளவில் திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் பன்னீா் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமாா் 85 சதவிகிதம் பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் பன்னீா் திராட்சை மகசூல் அதிகமாக உள்ளது. அதனால் தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். வெயில் காலம் இதனை சாறாக பருகினால் அதிக நன்மைகள் உள்ளன என்றனா்.

Advertisement