நெல்லை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மாற்றம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதன்கிழமை முதல் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதன்கிழமை முதல் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் பழைய வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு, தீக்காயப்பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, ரத்த பரிசோதனை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய அறுவைச்சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளை பெற ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்க அவசர சிகிச்சைப் பிரிவை புதிய கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை முதல் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவு செயல்பட தொடங்கியது. 108 ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள் அனைவரும் புதிய வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. புறக்காவல் மையமும் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. விபத்து உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டு வரும் பொதுமக்கள் 24 மணி நேரமும் புதிய வளாகத்தில் செயல்படும்உ அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு வரலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.