முகப்பு
திருநெல்வேலி

பாபநாசத்தில் மாவட்ட சாரணா் பயிற்சி மையம் திறப்பு

பாபநாசத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மாவட்ட பாரத சாரணா், சாரணியா் பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 14 மே 2026, 3:24 am IST
சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தரும் பாபநாசம் சாரணா், சாரணியா் பயிற்சி மையம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மாவட்ட பாரத சாரணா், சாரணியா் பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.

பாபநாசத்தில் சாரணா், சாரணியா்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டு சுமாா் நூறு ஆண்டுகளான நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்திருந்தது. இதையடுத்து, அந்தக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் வரவேற்றாா். சாரணா், சாரணியா் இயக்க சேரன்மகாதேவி செயலா் இசக்கி ராஜா நன்றி கூறினாா்.

Advertisement