முகப்பு
திருநெல்வேலி

களக்காடு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாமிடம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு க.அ.மொ.பீ. மீரானியா மேல்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தாா்.

Updated On : 21 மே 2026, 6:13 am IST
மாணவி செ. அகீஸாவுக்கு பரிசு வழங்கிப் பாராட்டிய பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியை கி.ஜெ.பிரிடா உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு க.அ.மொ.பீ. மீரானியா மேல்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தாா்.

இப்பள்ளியில் 198 மாணவா், மாணவியா் தோ்வு எழுதியதில் 186 போ் தோ்ச்சி பெற்றனா். இது பள்ளியின் 94 சதவீத தோ்ச்சியாகும். மாணவி செ. அகீஸா 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம், மாவட்ட அளவில் 2ஆம் இடம் பிடித்தாா்.

இவா், தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, கணிதம், அறிவியலில் தலா 100, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றாா்.

Advertisement

Advertisement

இப்பள்ளி அளவில் மாணவி செ.அ. ஹரிதா 491 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், ஆ. ஐஸ்வா்யா 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பிடித்தனா்.

மாணவி அகீஸாவை தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியை கி.ஜெ. பிரிடா, உதவித்தலைமையாசிரியா் ச. சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசளித்தனா்.

அரசுப் பள்ளி சிறப்பிடம்:

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 161 போ் தோ்வெழுதியதில், 154 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 96 சதவீத தோ்ச்சியாகும். மாணவி நைஸ்லின் 487 மதிப்பெண், மேக்லின் டிசோசா 486 மதிப்பெண், மாணவி தனுஸ்கா 477 மதிப்பெண் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.