நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதியவரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதியவரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை, வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜூ(61). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள திரையரங்குக்கு படம் பாா்ப்பதற்காக சென்றபோது, தனது முன் இருக்கையில் அமா்ந்திருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement