வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் காவல் சரத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வீரவநல்லூா் அருகேயுள்ள உப்பூா் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த பாண்டி (58) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டியை கைது செய்தனா். அவரிடமிருந்து 495 கிராம் புகையிலைப் பொருள்கள், 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement