நெல்லை அருகே விபத்து: அம்பை இளைஞா் உயிரிழப்பு
செய்துங்கநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த அம்பாசமுத்திரம் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த அம்பாசமுத்திரம் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊா்க்காடு பகுதியை சோ்ந்தவா் வெங்கடேஷ் (25). இவா், திருநெல்வேலியை அடுத்த தூத்துக்குடி மாவட்ட எல்கைக்குள்பட்ட செய்துங்கநல்லூா் பகுதியில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.