முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் அசன பண்டிகை

நாசரேத் தூய யோவான் பேராலய 85-வது பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 13 மே 2013, 2:05 am IST
பகிர்:

நாசரேத் தூய யோவான் பேராலய 85-வது பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

 முதல் நாள் இரவு சென்னை ஹெலன் சத்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, 2-வது நாள் மாலையில் பிரதிஷ்டை விழிப்பாராதனை நடைபெற்றது.

 ஓய்வுபெற்ற குருவானவர் ஸ்டீபன் தேவ செய்தி அளித்தார்.

Advertisement

Advertisement

3-வது நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை அசனபண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. மாலையில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், ஆயிரக்கணக்கான பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.   

 ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய தலைமைக் குருவானவர் மாணிக்கம், உதவி குருவானவர்கள் மோசஸ், பிரின்ஸ், அசன கமிட்டி தலைவர் செல்லத்துரை, செயலர் செல்லக்குமார், பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், இணைச்செயலர் கோயில்பிச்சை, உப-தலைவர் மர்காஷியஸ், சேகர செயலர் ஆனந்தராஜ், பொருளாளர் பவுளிஜெயச்சந்திரன் மற்றும் அசன கமிட்டி நிர்வாகிகள், சேகர கமிட்டி நிர்வாகிகள், சபை மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.