முகப்பு
தூத்துக்குடி

போதையில் தகராறு: தந்தை கழுத்தை நெரித்து கொலை

பேட்மாநகரம் அருகே ஞாயிற்றுக்கிழமை  போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 13 மே 2013, 2:03 am IST
பகிர்:

பேட்மாநகரம் அருகே ஞாயிற்றுக்கிழமை  போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

 பேட்மாநகரம் அருகே உள்ள சுந்தரலிங்கபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்கோட்டார்(40). இவருடைய மனைவி கனி (35). இவர்களுக்கு மாரிசெல்வம்(18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.   இவர் அருகிலுள்ள கல்குவாரியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

 இவர் தினமும் குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தாராம். இதை மாரிசெல்வம் கண்டித்தாராம்.  இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாரிச்செல்வம்  தந்தையின் கழுத்தை நெரித்தாராம். இதில் முத்துக்கோட்டார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Advertisement

Advertisement

 இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, மாரிசெல்வத்தை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.