தூத்துக்குடி

காயல்பட்டினம் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம்

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர்  இரா. அருணாஜோதி  தலைமை வகித்தார். மூன்றாமாண்டு கணிதவியல் துறை மாணவி ஜி.டி. அஸ்மா கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மனநல மருத்துவர் விஜயரெங்கன் மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்ற தலைப்பில் பேசினார். பெண்கள் மைய ஒருங்கிணைப்பாளர் சு. ஏஞ்சல் லதா, கல்லூரி இயக்குநர்  மெர்சி ஹென்றி  ஆகியோர் பேசினர். மகளிர் மைய மாணவியர் செயலர்  ஜெ. ஸ்ரீஜா நன்றி கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் சார்பில்:ஆறுமுகனேரியில் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் மகளிரணி அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டப்பட்டது. மாவட்ட மகிளாத் தலைவர் ஆர்.செல்வி தலைமை வகித்தார்.

பணிபுரியும் மகளிருக்கு பணிப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். இணையதளத்தில் ஆபாசத்தை தடுக்க பிரதமர் உறுதி தரவேண்டும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT