தூத்துக்குடி

'அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்'

DIN

அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் தென்னை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் முறையில் பாசனம் செய்திடவும், கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களுக்கு தெளிப்பு நீர் முறையில் பாசனம் செய்திடவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது.
தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை எளிதில் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து பயன்படுத்த முடியும். சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்திட விரும்பும் விவசாயிகள் தங்கள் புகைப்படம், குடும்ப அட்டை நகல், சிட்டா நகல், அடங்கல் நகல், நில வரைபடம், கிணறு ஆவணம், நீர் மற்றும் மண் பரிசோதனை ஆவணம், சிறு குறு விவசாயி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலுடன்  இணையதள முகவரியில் விண்ணப்பித்தால், 49 நாள்களுக்குள் முழு பணிகளும் முடித்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை அலுவலர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT