தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பட்டமளிப்பு விழா

DIN

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுயநிதிப் பாடப்பிரிவுக்கான 4ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, காமராஜ் கல்லூரிச் செயலர் ஆ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாகர் கலந்துகொண்டு 136 மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், அவர் பேசுகையில், பட்டப்படிப்பை முடிப்பவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயிலுகின்றனர். காமராஜர் எடுத்துரைத்த கொள்கையான கல்வியே வாழ்க்கைத் தரம் உயர்வுக்கு வழி என்ற கோட்பாடு என்றும் வெற்றிக்கு வித்தாகும் என்றார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் து. நாகராஜன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஏ.எம். டோனி மெல்வின், உடற்கல்வி இயக்குநர் பாலசிங் மற்றும் மாணவர், மாணவிகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT