தூத்துக்குடி

எட்டயபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

DIN

கோவில்பட்டி வட்டார பார்வை இழந்தோர் மறுவாழ்வு அறக்கட்டளை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா எட்டயபுரத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளை அறங்காவலர் சீனிவாசன் தலைமை வகித்தார்.  தலைவர் கணேஷ்ராஜா, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய மாநில அரசுகளில் சார்பில் மாற்றுதிறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள், அரசாணைகள், தொழிற்பயிற்சிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால் ஊனம் ஒரு குறையல்ல என்ற தலைப்பில் மாணவ மாணவியரிடையே பேச்சுபோட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், தேசிய பார்வையற்றோர் இணைய திட்ட இயக்குநர் மனோகரன், பள்ளி ஆசிரியர்கள் பிரபு, முத்துலட்சுமி, செல்வமாரியப்பன், அனுசுயா, சமூக ஆர்வலர் திருப்பதிராஜா, குணசேகரன், ராமகிருஷ்ணன் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT