எட்டயபுரத்தில் கட்டுமான தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலுக்கு தேவையான மணலை முறையாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்றாக உள்ள எம்.சாண்ட் மணல்
கட்டுமான தொழிலுக்கு தேவையான மணலை முறையாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்றாக உள்ள எம்.சாண்ட் மணல் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிற்சங்கம் சார்பில் எட்டயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செயலர் குருநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் ஆவுடையப்பன், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஒர் ஆண்டாக தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு இருந்து வருகிறது. வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானப் பணிகளுக்கு உள்ளுர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத வேலைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய பலன்கள் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி கிடைத்திட சட்ட நடைமுறைகளையும், விதிகளையும் எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் நல்லையா, கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரன், சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.