முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிரில், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலையோர சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பறை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.  நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர்  வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதையொட்டி வாகன ஓட்டிகளுக்கு, உங்களுக்காக ஐந்து நிமிடம் என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், போக்குவரத்து காவலர்கள் ஜெயகாந்தன், மணிமாறன், ரஞ்சித்குமார் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் ல.நந்தக்குமார் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →