தூத்துக்குடி

கோவில்பட்டி  நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

கோவில்பட்டி நகராட்சி சங்கரலிங்கபுரம் மேற்கு 1ஆவது தெரு பகுதியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 சங்கரலிங்கபுரம் 5ஆவது வார்டு மேற்கு 1ஆவது தெரு பகுதியில் சுமார் 30 வீடுகள் உள்ளதாம். இந்த வீடுகளுக்கு சுமார் 15  நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் சீவலப்பேரி குடிநீர் இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாத காலமாக விநியோகிக்கப்படவில்லையாம்.
மேற்கு 1ஆவது தெரு பகுதி மேட்டுப் பகுதியாக இருப்பதால் குடிநீர் குழாயில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லையாம். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அப்பகுதி பெண்கள் காங்கிரஸ் நகரத் தலைவர் சண்முகராஜ் தலைமையில், காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனர்.  பின்னர், தங்கள் பகுதிக்கு முறையாக ஆய்வு செய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி பொறியாளர் சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர். அதையடுத்து, நகராட்சி பொறியாளர், தங்கள் பகுதியில் முறையாக ஆய்வு செய்து, சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT