தூத்துக்குடி

கோவில்பட்டியில் 7இல் ஓவியப் போட்டி

DIN

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளி மாணவர், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி சனிக்கிழமை (ஜன. 7) கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 7ஆவது தேசிய வாக்காளர் தினம் இம்மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளி மாணவர், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில், கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர், மாணவிகள் கலந்துகொள்ளலாம். உயஉதவ யஞபஉத இஞமசபந மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்ற தலைப்புகளில் நடைபெறும் இப் போட்டியில் ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர்ஸ், கிரேயான்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி, ஏதாவது ஒரு தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும்.  வெற்றி பெறும் மாணவர், மாணவிகளுக்கு தேசிய வாக்காளர் தினமான இம்மாதம் 25ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT