தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் விலையில்லா வேட்டி,சேலை அளிப்பு

DIN

சாத்தான்குளத்தில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை வட்டாட்சியர் மு.நடராஜன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதையொட்டி சாத்தான்குளம் வட்டத்துக்கு முதல் கட்டமாக 19 ஆயிரத்து 100 வேட்டிகளும்,16 ஆயிரத்து 800 சேலைகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 900 வேட்டி, சேலைகள் வந்துள்ளன.
 சாத்தான்குளம் 2ஆம் எண் நியாயவிலை கடையில்  வேட்டி, சேலை வழங்கும் பணி  வியாழக்கிழமை தொடங்கியது. வட்டாட்சியர் மு. நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுராஜ் வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர் மசபியேல்,கிராம வருவாய் உதவியாளர் முத்துராமலிங்கம், சிவகாமி, நியாயவிலை கடை ஊழியர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT