தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வேளாண் கல்வி தின பேச்சுப் போட்டி

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வேளாண் கல்வி தின பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்வி தின  கொண்டாட்டத்தை முன்னிட்டுய "எதிர்கால இந்தியாவின் விவசாயம்- மீன்வளத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் 8 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில் நகரிலுள்ள 7 பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே. வெர்ஷா சரபா முதல் பரிசையும், திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. ரீம் இரண்டாம் பரிசையும், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. ஆனந்தி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
 வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், மாணவர் சங்க துணைத் தலைவர் சீனிவாசன், பேராசிரியர்கள் நீதிச்செல்வன், உமா மகேஸ்வரி, மாணவர் சங்க பொதுச்செயலர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT