தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

DIN

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான அளவு எடுக்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த உபகரணங்களை பிரத்யேகமாக தயாரித்து வழங்கி வருகிறது. அதன்படி, நிகழாண்டு தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்க திட்டமிப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள உபகரணங்களுக்கான அளவு எடுக்கும் முகாம் சில்வர்புரம் லூசியா இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமில் பிரீடம் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் சுந்தர் தலைமையிலான குழுவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு அளவுகளை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில்,  ஸ்டெர்லைட் நிறுவன துணைத் தலைவர் முருகேஸ்வரன்,  மக்கள் தொடர்பு துறை தலைவர் இசக்கியப்பன்,  தலைமை மருத்துவ அதிகாரி கைலாசம்,  லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்ல இயக்குநர் மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முகாமின்போது,  மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான அளவு எடுக்கப்பட்டது. அவர்களுக்கு தனித்தனியாக உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு அடுத்த மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT