தூத்துக்குடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில், திருச்செந்தூர் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் என்.பெரியசாமி தலைமை வகித்தார். கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாநகரச் செயலர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.திருச்சிற்றம்பலம், பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகரச் செயலர் கா.கருணாநிதி முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணைச் செயலர்கள் ஏஞ்சலா, செந்தூர்மணி, மாவட்டப் பொருளாளர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் என்ற மாறன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பா.மு.பாண்டியன், அன்புராஜன், ஒன்றியச் செயலர்கள் முருகேசன் (மேற்கு), நவநீதகண்ணன் (கிழக்கு), சின்னப்பாண்டியன் (கயத்தாறு), காசிவிஸ்வநாதன் (ஓட்டப்பிடாரம் கிழக்கு) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் அமுதா கோபால்ராஜா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி, மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சோழபெருமாள், மொழிப்போர் தியாகி பா.முத்து, முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் இளையபெருமாள், வழக்குரைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT