தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்

DIN

விளாத்திகுளம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சக்கம்மாள்புரம் கிராமத்தில் நடைபெற்றது.
வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுனில் கெளசிக் தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் முத்துச்சாமி, உதவி வேளாண் அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில் பயிர் மேலாண்மை, பயறுவகை பயிர்கள், விதைப்பு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள், அறுவடை பின்சார்ந்த தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், வேளாண் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் இளமதி, திட்ட மேம்பாட்டு அலுவலர் சுந்தர்ராஜ், வட்டார வேளாண் தொழில்நுட்ப பணியாளர்கள் கோவிந்தராஜ், நித்யா, வினோத்ராஜ் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT