தூத்துக்குடி

திருச்செந்தூரில்4ஆவது நாளாக மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

DIN

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி திருச்செந்தூரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் 4ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
காளை வடிவில் வளையம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொம்புடன் கூடிய காளை வடிவில் வளையம் அமைத்திருந்தனர். இது பார்வையாளர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் ரயில் மறியல்: திருச்செந்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கரும்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் திருச்செந்தூர் கல்யாணசுந்தரம், ஆழ்வார்திருநகரி வெள்ளைச்சாமி, ஸ்ரீவைகுண்டம் அம்பிகாவதி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராமையா, ஆறுமுகமங்கலம் விவசாய சங்கத் தலைவர் கோபால், மாவட்ட மாதர் சங்க உதவிச் செயலர் ஆனந்தம்மாள் உள்பட 32 பேர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT