தூத்துக்குடி

ராஜபதி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை

DIN

நவகைலாய தலத்தில் எட்டாவது தலமான, குரும்பூர் அருகே உள்ள ராஜபதி ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ரூ.1.5 கோடி செலவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது .
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் 10.15-க்கு ராஜகோபுர திருப்பணி வாஸ்து கால்கோள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி கைலாஷ் அறக்கட்டளை மற்றும் இத் திருக்கோயில் தலைவருமான குரு. பாலசுப்பிரமணியன், ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT