தூத்துக்குடி

உடன்குடியில் நாளை தூய மாற்கு ஆலய 169ஆவது பிரதிஷ்டை விழா

DIN

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலயத்தின் 169ஆவது பிரதிஷ்டை, அசன பண்டிகை விழா சனிக்கிழமை (ஜன. 28)நடைபெறுகிறது.
இந்த விழா கடந்த 20ஆம் தேதி நற்செய்திக் கூட்டத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் திருவிருந்து ஆராதனை, நற்செய்திக் கூட்டங்கள், பேரின்பப் பெருவிழா, திடப்படுத்துதல் ஆராதனை, இன்னிசை, வேதபாடத் தேர்வு, ஆயத்த ஆராதனை ஆகியவை நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை, திருவிருந்து ஆராதனை, 6 மணிக்கு அசனப் பணித் தொடக்கம், மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் அசன ஐக்கிய விருந்து நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்தோத்திர ஆராதனை உள்ளிட்டவை நடைபெறும். ஏற்பாடுகளை ஆலய பரிபாலனர் ஞானராஜ் கோயில்பிள்ளை, தலைவர் பால்ராஜ், செயலர் பிரின்ஸ், அசனக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT