தூத்துக்குடி

கல்லூரிகளில் தேசிய வாக்காளர் தின விழா

DIN

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி கல்லூரிகளில் வாக்காளர் தின விழா நடைபெற்றது.
எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில், மாணவர், மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினம் குறித்த பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் முதல்வர் (பொ) ஆதிலட்சுமி தலைமையில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமையில், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி முன்னிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி பேசினார்.   தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT