தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

DIN

விளாத்திகுளம் அருகே புதூர் கம்பத்துப்பட்டியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது.
புதூர் கம்பத்துபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பவுன்ராஜ் (60). கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பூச்சி மருந்து அருந்திய நிலையில் மீட்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இறந்த விவசாயி பவுன்ராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் சு. கண்ணபிரான், விளாத்திகுளம் வட்டாட்சியர் ஈஸ்வரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கம்பத்துபட்டிக்கு சென்று பவுன்ராஜின் மனைவி ராஜசிலுக்கம்மாளிடம் தமிழக அரசின் சார்பில் ரூ.3 லட்சத்துக்கான காசோலையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT