தூத்துக்குடி

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி

DIN

மத்திய அரசின் பவர் கிரீட் ஆப் இந்தியா நிறுவனம் சார்பில், கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மத்திய அரசின் எரிசக்தி துறையில் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரீட் கார்ரெசன் ஆப் இந்தியா நிறுவனம் சார்பில், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் மருத்துவ ஊர்திகளை தேவைப்படும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நாடுமுழுவதும் நன்கொடையாக வழங்கி வருகிறது.
அதன்படி,  தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரூ.7.50 மதிப்புள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை பவர் கிரீட் நிறுவனம் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் முன்னிலையில் திங்கள்கிழமை வழங்கியது.
வாகனத்துக்கான சாவியை ஆம்புனல்ஸ் ஓட்டுநரிடம் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வழங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். சுகாதாரப் பணிகள் கோவில்பட்டி துணை இயக்குநர் போஸ்கோராஜா வாகனத்தை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பவர் கிரீட் நிறுவன கூடுதல் பொது மேலாளர் ஏ. சுரேந்திரன், துணை பொது மேலாளர் சண்முகசுந்தரம், தலைமை மேலாளர் மோகன்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT