தூத்துக்குடி

பிப். 3இல் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு

DIN

தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பொதுமக்கள் பிப். 3 ஆம் தேதி பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி மனோஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ், தூத்துக்குடியில் இயங்கிவரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் பலவேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை மாணவர், மாணவிகள் பார்வையிட ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்படுவர்.
அதன்படி, தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள், மாணவர், மாணவிகள் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT