தூத்துக்குடி

பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

DIN

உடன்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு உடன்குடி ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். நகர பாஜ க இளைஞரணித் தலைவர் முத்து தர்மலிங்கம், ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன், நகரத் தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய அமைப்புச் செயலர் அழகேசன், ஒன்றிய துணைத்தலைவர் சிவந்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆக.7 ஆம் தேதி பாஜக தேசிய இளைஞரணித் தலைவர் பூனம் மகாஜன் தலைமை யில் சென்னையில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது, பாஜக அரசின் சாதனைகளை விளக்கி இருசக்கர வாகனப் பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில வர்த்தக அணித் தலைவர்  ராஜக் கண்ணன், மாவட்டச் செயலர் ரா.சிவமுருக ஆதித்தன், மாவட்ட இளைஞரணிச் செயலர் மாரிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தொடர்ந்து பாஜக மாவட்டச் செயலர் சிவமுருக ஆதித்தன் தலைமையில் இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பாஜக நிர்வாகிக ள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT