தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பயிற்சி முகாம்

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இணையதளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்து  மாணவர்} மாணவிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு கல்லூரி இயக்குநர் முனைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம்,  துணை வட்டாட்சியர் (தேர்தல்) மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கல்லூரி இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் படிவம் 6,  7,  8, 8 அ ஆகிய பெயர் சேர்த்தல், நீக்குதல், சரி செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தனர்.
முகாமில் நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர். கலைக் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியைச்  சேர்ந்த 100 மாணவர்}மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம் வழிகாட்டுதலின் பேரில், கே.ஆர்.கல்வி  நிறுவனங்களைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள்,மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT